Showing posts with label TN students refuse. Show all posts
Showing posts with label TN students refuse. Show all posts

Friday, 29 June 2018

மாணவர்களின் பாச போராட்டம் வென்றது !!! ஆசிரியர் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி!!!

இடம் மாற்றம் செய்ய பட்ட ஆசிரியர் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி!!!!!

வைரல் ஆனா மாணவர்கள் கதறி அழுத வீடியோ!!!! 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவான். இவர் சில தினங்களுக்கு முன் பணிநிரவளில் திருத்தணியை அடுத்த அருங்குளம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார் .

இதையடுத்து வெளியகரம் பள்ளியில் பணி விடுப்பு கடிதம் பெற்று திரும்பிய பகவானை மாணவ-மாணவிகள் வழிமறித்து வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர். அப்போது எடுக்கப்பட்ட மொபைல் வீடியோ பெருதும் விறல் ஆனது .

கிழித்து எறிந்தார் 

இதையடுத்து ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் 10 நாட்கள் தொடர்ந்து பணியாற்ற அதிகாரிகள் வழங்கினார்கள் . மாணவர்கள் பகவானை சுற்றி வளைத்து கதறி அழுதபோது தலைமை ஆசிரியர் அரவிந்த் மாணவ-மாணவிகளையும் , அவர்களது பெற்றோர்களையும்  அமைதி படுத்த பகவானுக்கு வழங்கிய விடுப்பு கடிதத்தை அவர்கள் முன்னாள் கிழித்து எறிந்தார் .


இதையடுத்து மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் கலைந்து சென்றனர் . இந்த நிலையில் ஆசிரியர் பகவானுக்கு கடந்த  வெள்ளிக்கிழமை பணிவிடுப்பு கடிதம் வழங்கப்பட்டது . அவர் சனிக்கிழமை அருங்குளம் பள்ளிக்கு சென்று பணியில் சேர்த்து விட்டார் .

பணியை தொடங்கினார் 

இந்த நிலையில் மாணவர்களின் பாச போராட்டம் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் பகவானை வெளியகரம் அரசினர் உயர்நிலை பள்ளியில் மாற்றுப்பணியில் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர் .

இதையடுத்து ஆசிரியர் பகவான் கடந்த திங்கள்கிழமை முதல் மாற்றுப்பணியில் வெளியகரம் பள்ளியிலேயே தனது பணியை தொடங்கினார் .










Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...