Showing posts with label director shankar. Show all posts
Showing posts with label director shankar. Show all posts

Thursday, 13 September 2018

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560">


விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்ட்ரி -ரஜினியின் 2.0 டீஸர்


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக
உருவாகி வரும் இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்க பட்ட 2.0 படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

முழுக்க முழுக்க 3டி கேமராவை பயன்படுத்தி 2.0 படம் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ரஜினி , அக்சய் குமார் , எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய படத்தின் வேலைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது . எ.ஆர் . ரகுமான் இசை அமைக்க லைக்கா நிறுவனம்  இப்படத்தை தயாரித்துள்ளது . படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. 




உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 3000 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் உழைப்பில் 2.0 படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 3டி யில் வெளியாகியுள்ள இந்த டீசரை திரையரங்குகளில் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

டீசரில் டாக்டர் ரிச்சர்ட் ஆகா அக்ஷய்  குமார் , சிட்டி ரஜினி மோதும் காட்சிகளும், செல் போன் வானத்தை நோக்கி ஈர்க்கப்படும் காட்சிகளும் பிரமிப்பை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சில காட்சிகள் படத்தின் முக்கிய பாத்திரங்களை காட்டும் வண்ணம் எடிட் செய்து சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது .

கண்டிப்பாக தமிழ் சினிமாவின் புதிய மைல் கல்லாக இப்படம் அமையும் என்பது உறுதி என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...