Showing posts with label russian girl raped. Show all posts
Showing posts with label russian girl raped. Show all posts

Tuesday, 24 July 2018

காமுகர்களிடம் சிக்கிய ரஷ்ய பெண் !!!!

காமுகர்களிடம் சிக்கிய ரஷ்ய பெண் !!!!

ரஷ்யாவை சேர்ந்த அலினா , கடந்த ஜூன் 12-ஆம் தேதி திருவண்ணாமலை வந்திறங்கினார். விசிறி சாமியார் ஆசிரமம் அருகே தனியார் விடுதி ஒன்றில் அரை எடுத்து தங்கினார். 




இந்த விவகாரத்தில் போதுமான விளக்கங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் , சில தெரிந்த நியாயமான அதிகாரிகளிடம் என்னதான் நடந்தது என்று கேட்டு தெளிகையில் ,

:பேரடைஸ் விடுதி மலேசியாவில் உள்ள ஒருவருக்கு சொந்தமானது. அதனை பாரதி என்ற இளைஞர் லீஸ் முறையில் எடுத்து நடத்தி வருகிறார். அவரது அண்ணன் நீலகண்டன் அவருக்கு உதவியாக இருந்துள்ளார் . ஐந்து அறைகள் கொண்ட விடுதியில் ஆன்லைன் மூலம் அறை பதிவு செய்து தங்கியுள்ளார் அலினா.

கடந்த 14-ஆம் தேதி இரவுதான் அந்த விபரீதம் நடந்திருக்கிறது. மணிகண்டன் என்பவரது பிறந்தநாளை பாரதி , நீலகண்டன், டிரைவர் வெங்கடேசன் , அவரது நண்பர் சிவா ஆகியோர் மது அருந்தி கொண்டாடியுள்ளனர். அதோடு வேறு போதை மருந்தும் பயன்படுத்தியுள்ளனர்.

மிதமிஞ்சிய போதையில் , அலினா அறைக்கதவை தட்டி உள்ளே சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மறுநாள் காலை மீண்டும் சபலத்தில் அலினாவை ரேப் செய்துள்ளனர். பின்பு அலினா எழாமல் போகவே ..பயத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் . அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் பலாத்காரம் நடந்திருப்பதை புரிந்து கொண்டு காவல் துறைக்கு தகவல் அனுப்பியுள்ளார் 

மாவட்ட நீதிபதி மகிழேந்தி கடந்த 17-ஆம் தேதி மாலை மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் சிகிச்சை பற்றி விசாரித்து விட்டு , முறையற்ற விடுதிகள் குறித்து காவல் துறை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுயள்ளேன்" என்றார் .

ரஷ்யா வெளியுறவு துறை அதிகாரி டேவிட்சன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். 

திருவண்ணாமலையில் வெளிநாட்டவரை குறிவைத்து கஞ்சா,ஹெராயின் போதை வஸ்துகள் விற்பனை நடக்கிறது . இது காவல் துறைக்கு தெரிந்தே நடப்பதாகவும் முறையாக மாமூல் போவதால் அவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .

19-ஆம் தேதி அலினா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிகண்டன் , பாரதி, நீலகண்டன், வெங்கடேசன்  ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளது காவல் துறை .


News Coutesy: நக்கீரன் 24/07/2018 பதிவு 



















Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...