Friday 23 February 2018

நீங்கள் மறுஜென்மம் எடுத்தவரா என்பதை கண்டுபிடிப்பது எப்படி ? 



மறுஜென்மம் என்பது உண்மையாக இருக்கலாம் என்று அறிவியல் வல்லுநர்கள் சமீபத்தில் கருத்து தெரிவிக்கின்றனர். ஹிந்து மதத்தின் கோட்பாடுபடி ஆன்மாவிற்கு அழிவு என்பது ஒன்று இல்லை. இறப்பு என்பது ஆன்மாவின் அடுத்த பயணத்தின் தொடக்கம் என்றும் அது ஏழு பிறவி எடுத்து பின் முக்தி அடையும் எனவும் கூறப்பட்டிருக்கிறது . 


நம் ஆன்மாவின் பயணக்குறிப்பு ஆழ்மனதிற்கு தெரியும் என்றும் அது தன் அடுத்த பயணத்தை தொடரும்போது போன ஜென்மத்தில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்களை தாமாக உபயோக படுத்துவதாகவும் கண்டரியப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அறிகுறிகள் நாம் பூமியில் ஏற்கனவே பிறந்ததிற்கான சாட்சியாக அமைந்தனவாகும் .


கனவுகள்  என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. 


ஒரே கனவு பலமுறை வந்தால் நீங்கள் மறுஜென்மம் எடுத்து வந்தவர் என்றும், நீங்கள் மறுஜென்மம் எடுத்த நோக்கத்தையும் போக வேண்டிய பாதையில் இருந்து விலகி சென்று கொண்டிருப்பதையும் நம் ஆழ்மனது நமக்கு எடுத்துரைக்க, சில போன ஜென்ம நினைவுகளை கனவுகளாய் நமக்கும் காண்பிக்கிறது என்று பொருள் கொள்ளலாம் .


மறுஜென்மம் எடுத்து வந்தவர்கள் இளம் வயதிலேயே மிகவும் சாதுர்யமாகவும் பேசவும் செயல்களில் முதிர்ச்சியும் கொண்டிருப்பார்கள்.


மேலும் இவர்கள் சிறு வயதிலேயே சிறந்து முடிவெடுக்கும் தகுதி உடையவராய் விளங்குவார்கள். வயதில் மூத்தவர்களுக்கே ஆலோசனை சொல்லும் அளவிற்கு முதிர்ச்சியுடன் காணப்படுவார்கள் .


மறுபிறவி எடுத்து வந்தவர்கள் அனைவரும் தனிமையை அதிகம் விரும்புபவர்களாக இருப்பர். அவர்களின் ஆன்மா பொதுவாக நிறைய மனிதர்களை கடந்து வந்துருக்கும் ஆதலால் இவர்கள் பெரும்பாலும்
சோம்பேறிகளாவும் தனிமை விரும்பிகளாகவும் இருப்பது இயல்பே .


பொதுவாக நண்பர்களோ உறவினர்களோ கூடும் இடத்தில பேசக்கூடிய தலைப்புகள் நடப்பு செய்தி, நடந்த விஷயங்கள், விளையாட்டு, வானிலை போன்றவை தான் அதிகமமாக இருக்கும் . ஆனால் மறுபிறவி எடுத்தவர்கள் அமானுஷ்யத்தை பற்றிய தலைப்புகளுக்கே ஆர்வம் காட்டுவார்கள் மேலும் அதை பற்றி பேசவும் செய்திகள் சேகரிப்பதிலும் அதிகம் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள் .


பொதுவாக ஏற்கனவே பிறப்பெடுத்தவர்களுக்கு வாழ்வின் ஆரம்பமும் முடிவும் நன்கு தெரிந்திருக்கும். இவர்கள் அனைவரும் உல்லாச வாழ்க்கை விரும்பிகளாக இருப்பார்கள். இவர்கள் இல்லறவாழ்வில் நம்பிக்கை அற்றவராகவும் பல (பெண்கள்/ஆண்கள் ) தொடர்பு வைத்திருப்பவராகவும் இருப்பார்கள். 


நீங்கள் மறுபிறப்பு எடுத்தவரா என்று கணித்து சொல்லும் மொபைல் Application இருக்கிறது. அது உங்களிடம் சில கேள்விகள் கேட்டு அதை வைத்து கணித்து சொல்கிறது .
 





No comments:

Post a Comment

Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...