Friday, 29 June 2018

மாணவர்களின் பாச போராட்டம் வென்றது !!! ஆசிரியர் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி!!!

இடம் மாற்றம் செய்ய பட்ட ஆசிரியர் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி!!!!!

வைரல் ஆனா மாணவர்கள் கதறி அழுத வீடியோ!!!! 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவான். இவர் சில தினங்களுக்கு முன் பணிநிரவளில் திருத்தணியை அடுத்த அருங்குளம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார் .

இதையடுத்து வெளியகரம் பள்ளியில் பணி விடுப்பு கடிதம் பெற்று திரும்பிய பகவானை மாணவ-மாணவிகள் வழிமறித்து வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர். அப்போது எடுக்கப்பட்ட மொபைல் வீடியோ பெருதும் விறல் ஆனது .

கிழித்து எறிந்தார் 

இதையடுத்து ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் 10 நாட்கள் தொடர்ந்து பணியாற்ற அதிகாரிகள் வழங்கினார்கள் . மாணவர்கள் பகவானை சுற்றி வளைத்து கதறி அழுதபோது தலைமை ஆசிரியர் அரவிந்த் மாணவ-மாணவிகளையும் , அவர்களது பெற்றோர்களையும்  அமைதி படுத்த பகவானுக்கு வழங்கிய விடுப்பு கடிதத்தை அவர்கள் முன்னாள் கிழித்து எறிந்தார் .


இதையடுத்து மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் கலைந்து சென்றனர் . இந்த நிலையில் ஆசிரியர் பகவானுக்கு கடந்த  வெள்ளிக்கிழமை பணிவிடுப்பு கடிதம் வழங்கப்பட்டது . அவர் சனிக்கிழமை அருங்குளம் பள்ளிக்கு சென்று பணியில் சேர்த்து விட்டார் .

பணியை தொடங்கினார் 

இந்த நிலையில் மாணவர்களின் பாச போராட்டம் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் பகவானை வெளியகரம் அரசினர் உயர்நிலை பள்ளியில் மாற்றுப்பணியில் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர் .

இதையடுத்து ஆசிரியர் பகவான் கடந்த திங்கள்கிழமை முதல் மாற்றுப்பணியில் வெளியகரம் பள்ளியிலேயே தனது பணியை தொடங்கினார் .










பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புதிய முறை அறிமுகம்!!!!!- Passport Seva App !!!





இருந்த இடத்திலேயே இனி பெறலாம் 


பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்க பாஸ்போர்ட் அலுவலகம் சென்று நேரில் விண்ணப்பிக்கும் நிலை தான் தற்போது உள்ளது . இந்த அலுவலகங்கள் பெரிய நகரங்களில் மட்டுமே இருக்கும் . இதனால் மற்ற ஊர்களில் வசிப்பவர்கள் இதற்காக நேரில் வந்து அலைய நேரிடும் .

இந்த நிலையில், இருந்த இடத்திலேயே பாஸ்ப்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பாஸ்போர்ட் சேவா  என்ற புதிய செயலியை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று ஜூன் 26ஆம் தேதி 2018-இல் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த செயலியை செல்போன் , கணிப்பொறி , லேப்டாப் பயன்படுத்தி நாம் குறிப்பிட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்வு செய்து விண்ணப்பித்தால் போலீஸ் சரிபார்ப்பு முடிந்த பிறகு தபாலில் பாஸ்போர்ட் வீடு தேடி வரும்.



இதன் மூலம் அலைச்சல் இன்றி பாஸ்ப்போர்ட்டை விரைவாக பெற இயலும் .
நிகழ்ச்சியில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில் , நாடு முழுவதும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் .

Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...