Wednesday 10 January 2018

உலகின் மிக பெரிய மர்மம் - மறைக்கப்பட்ட காரணம் என்ன?

மாவீரன் அலெக்சாண்டர், பண்டைய கிரேக்க ராஜ்ஜியமான மாசிடோனின் அரசனாவான்.  உலகத்தின் மிக பெரிய சாம்ராஜியத்தை  நிறுவிய முதல் அரசன் மூன்றாம்  அலெக்சாண்டர்என்பது உலகறிந்ததே . 




மாவீரன் அலெக்சாண்டர் பற்றி பலருக்கு தெரியாமல், இன்றும் மர்மமான ஒரு விஷயம் அவரின் சமாதியின் இருப்பிடமே .  வரலாற்று ஆய்வாளரான டியோடர்ஸ் கூற்றுப்படி மாவீரனின் சடலம் பதனீடு செய்யப்பெற்று தங்கத்தால் உருவான பெட்டியிஇல் வைத்து மீண்டும் ஒரு தங்க சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது என்று கூறப்பற்றிருக்கிறது .
அந்த சவப்பெட்டி பயணித்த இடம் என்ற அவர் குறிப்பிட்டுள்ள இடம் எகிப்தில் உள்ள சீவ அமுன் என்ற கோவில். ஆனால் எந்த ஒரு இடத்திலும் அதற்கான அடையாளமோ ஆதாரமோ இன்றளவும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.



இது ஒரு புறம் இருக்க அலெக்சாண்டரின் நெருங்கிய நண்பரும் படை தளபதியான படோலேமி சவ ஊர்வலத்தை பாதியிலேயே திசை திருப்பி அலெக்ஸாண்ட்ரியா என்னும் இடத்தில புதைக்க வேண்டும் என்று கூறி அலெக்சாண்டரின் சடலத்தை கடத்தி விட்டதாகவும் சில வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ ஆனால் இன்றளவும் அலெக்சாண்டரின் சமாதியை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை .



உலகத்தையே கட்டி ஆண்ட மன்னனின் உடலை மறைப்பதற்கு கரணம் என்ன ? அப்படி அந்த சவ பெட்டியில் என்னதான் இருந்தது? எதற்காக அவரின் நினைவிடம் பற்றியோ இறந்த பின் நடந்த நிகழ்வுகளோ பற்றியோ எந்த குறிப்பகளும் எழுதப்படவில்லை?  எப்படி பல கேள்விகளுடன் இன்றும் உலகத்தில் தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது.

No comments:

Post a Comment

Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...