Thursday, 11 January 2018

ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய பிரபலங்கள்

உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழர்கள்

உலக அரங்கில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு இவற்றின் பெருமையைப் பறைசாற்றிய பிரபலங்கள் பல அதில் சில தமிழர்கள் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தனர்.   

1. சிவா அய்யாதுரை 
ஷிவா ஐயாதுரை திசம்பர் 2, 1963 இல் தமிழ்நாட்டில் பிறந்தார். தனக்கு அகவை 7 இருக்கும் பொழுது தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார். இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின் பொறியியல், கணினி அறிவியல் துறைகளில் பட்டம். உலகத்தின் தகவல் பரிமாற்றத்தையே திருப்பி போட மின்னஞ்சலை கண்டுபிடித்தவர்.மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி அதற்கான காப்புரிமையை 1982 இல் அமெரிக்காவிடம் இருந்து பெற்றவர்.

2.சீனிவாச  ராமானுஜம் 
ஸ்ரீனிவாச ஐயங்கார் ராமானுஜன் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி, 1887ல் பிறந்தார். அவரது தந்தை கும்பகோணத்திலுள்ள ஒரு துணி வியாபாரியின் கடையில் குமாஸ்தாவாக பணியாற்றினார்.20 ஆம் நூற்றாண்டின் உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதையாவர். இவர் குறுகிய காலங்களிலேயே, (அதாவது 1914ஆம் ஆண்டு  முதல் 1918ஆம் ஆண்டு வரை) 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

3. ஷிவ் நாடார்ஷிவ் நாடார் அவர்கள், 1945  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள “மூலைபொழி” என்ற கிராமத்தில், சிவசுப்ரமணி நாடார் என்பவருக்கும், வாமசுந்தரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார்.கும்பகோணத்திலுள்ள டவுன் மேல்நிலைப்பள்ளியில், தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கிய ஷிவ் நாடார், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தனது உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். 1970 ஆம் ஆண்டு, ஐ.பி.எம் இந்தியாவிலிருந்து வெளியேறும்போது, ஷிவ் நாடார் தன்னுடைய எச்.சி.எல் நிறுவனத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். 1982 ஆம் ஆண்டு, எச்.சி.எல் நிறுவனத்தின் முதல் கணினி வெளியிடப்பட்டது. இன்றைய காலகட்டத்தில், எச்.சி.எல் கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்களின் வருவாய் 80% பெறுகியுள்ளது. எச்.சி.எல் நிறுவனத்தின் படைப்புகள், இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது .

4. சர் சி.வி. ராமன்இந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன் ஆவார். சந்திரசேகர வேங்கட ராமன், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார். சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார். அவரது படைப்புகளில் முன்னோடியான ஒளிச்சிதறளுக்கு, சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இந்தியாவில் நோபல் பரிசு வென்ற இரண்டாம் நபர் இவராவார்.

5. சுந்தர் பிச்சை கூகிள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை . இவர் சென்னையில் பிறந்து காரக்பூர் ஐஐடி இல் உலோகத்திறன் பொறியியல் படிப்பை முடித்தவர். இளம் வயதிலேயே இவர் அறிவாற்றலும் திறமையும் மிக்கவராய் திகழ்ந்தார். கூகிள் chrome என்ற பிரௌசர் கணினியை அறிமுகப்படுத்தி கூகுளேளின் அசுர வவளர்ச்சிக்கு வித்திட்டவர்.

  

இன்னும் பல தமிழர்கள் நமது தமிழ்நாட்டை உலக அளவில் தலைநிமிர செய்திருக்கிறார்கள் . அவர்களைப்பற்றிய பதிப்பு இன்னோரு கட்டுரையில் பதிவு செய்கிறோம் .

உங்களின் பட்டியலை comment பகுதியில் பதிவிடலாம் . மேலும் இதுபோல் தகவல் பதிப்புகளை தொடர்ந்து பெற Preview Club முகப்புத்தக பக்கத்தில் லைக் செய்யவும்.

இந்த கட்டுரையை முடிந்த அளவுக்கு ஷேர் செய்து தமிழின் பெருமையை பறைசாற்றுவோம் .

நன்றி

https://www.facebook.com/Preview-CLUB-159073714867648/

No comments:

Post a Comment

Followers

Follow by Email - Get Notified for New Posts

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...