Sunday, 22 April 2018

CSK அசத்தல் வெற்றி - மைதானத்தில் தோனிக்கு காதல் தூது விட்ட ரசிகை !!!!


இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது.  ஐபிஎல்., தொடரின் 20 வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான  சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது . பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில உள்ள அணிகளின் மோதல் என்பதால் போட்டியின் எதிர்ப்பார்ப்பு வழுத்திருவலுவாக காணப்பட்டது..

டாஸ் ஜெயித்த சன் ரைசெர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ்சை பேட்டிங் செய்ய பணித்தது . தொடக்கம் முதலே சிறந்த பந்துவீச்சில் ஈடுபட்டு ரன் எடுப்பதை கடினமாக்கியது ஹைட்ரபாத் அணி. ஷேன் வாட்சன் 9(10), டுப்லெஸிஸ் 11(13) வெளியேறி சென்னை அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். 7 ஓவர் முடிவடைந்த நிலையில் 31/2 ரன்னில் ராயுடு - ரெய்னா ஜோடி சேந்தது. இவர்கள் அணியின் ஸ்கோரை நன்கு உயர்த்தினார். இதில் ராயுடு அதிரடியாக ரன்கள் சேர்க்க, சென்னை அணி, சரிவில் இருந்து மீண்டு வந்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தனர். அவர்களின் பட்டியல் ராயுடு அரைசதம் விளாசினார்.  பின்னர் இறங்கிய டோனி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் 20 ஓவேரில் 182/3 என்ற இலக்கை அடைந்தனர்.

ஹைதெராபாத் அணியின் நட்சத்திர வீரரான ஷிகார் தவான் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிக்கொண்டது ஹைதெராபாத் அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது . எனினும் புதுமுக வீரரான ரிக்கி புய் களம் இரக்கப்பட்டார் . ஆனால் அவர் முதல் ஒவேரிலேயே  டுக்கவுட் என்ற முறையில் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கேப்டன் வில்லியம்சன் விளாசல் 
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஹைட்ரபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .  ஆனால் ஒரு புறம் சென்னை அணி விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டே இருந்தது .  சென்னை அணியின் தீபக் சஹர் சிறந்த பந்துவீச்சில் ஈடுபட்டார். இவர் இந்த சீசன் நின் முதல் மெய்டன் விக்கெட் எடுத்து தனது பங்கை பதிவு செய்தார். எனினும் வில்லியம்சன் - யூசுப் பதான் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீடாது.

IPL 2018: MS Dhoni
இந்நிலையில் கடைசி ஒவேரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றிருந்த பொது பிராவோ வை தோனி பந்து வீச அழைத்தார். 1 சீஸ் 1 பௌர் அடித்து பயம் காட்டிய ரஷீதால் கடைசி பந்தில் 6 ரன் அடிக்க தவறினார் . சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் இறுதியில் வென்றது. 

ஜடேஜா அசத்தல் 
நீண்ட இடைவெளிக்கு பின் 4 ஓவர் வீச ஜடேஜாவுக்கு இன்று வாய்ப்பு கிடைத்தது . அவரும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் . அவர் 4 ஓவர்கள் போட்டு 29 ருங்கள் மட்டுமே கொடுத்திருந்தார். மேலும் வில்லியம்சன் அடித்த பந்தை இலாவகமாக பிடித்து கேட்ச் என்ற முறைப்படி வெளியேற்றினார் . சிறந்த கேட்ச்கான விருதும் கிடைத்தது.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய ராயுடு வின் 79(37) ஆட்டத்திற்கு சிறந்த ஆட்டநாயகன் விருது வழங்க பட்டது.

சென்னை முதல் இடம் 
இந்த அபார வெற்றியால் சென்னை மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது . புள்ளி பட்டியலில் சென்னை அணி 5 போட்டிகள் விளையாடி 4 போட்டியில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது .


போட்டி நடைபெற்ற மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அதில் ஒரு ரசிகை டோனியை தான் காதலிப்பதாகவும் டோனி தான் தன்னுடைய முதல் காதல் என்றும் குறிப்பிட்ட வாசகம் தாங்கிய தாளை கேமெராவில் அனைவரும் பார்க்க காண்பித்தார் . 


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் பெற  கிளிக் செய்யவும் 
1 comment:

Followers

Follow by Email - Get Notified for New Posts

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...