Sunday 22 April 2018

YETI - "THE BIG FOOT" AN UNSOLVED MYSTERY (Tamil)



ஆசியா கண்டத்தில் ஹிமாலய பகுதிகளில் மிக பிரபலமான ஒரு மர்மம் தான் இந்த எட்டி எனப்படும் பனிமனிதன் .  பனிமனிதனை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருதலும் இன்றளவும் எந்த ஒரு பெரிய ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதான் விசித்திரமாகவுள்ளது.

பனிமனிதனை பற்றிய சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் பற்றியும் சாத்தியக்கூறுகள் பற்றயும் இந்த பதிவில் காண்போம்.

எட்டி-யின் வரலாறு

எட்டி என்பது இமாலய பகுதிகளில் பரவலாக பேசப்படும் புராண கதைகளில் வர கூடிய சிவனின் எதிர்மறை கதாபாத்திரமாகும் . சுருக்கமாக ஒரு ஆபத்தான மிருககுணம் கொண்டவன் என்று கூறலாம் .



அலெக்சாண்டர் ஒரு முறை ஹிமாலயம், இண்ட்ஸ் பள்ளத்தாக்கை கைப்பற்றியபோது (326 B.C)   எட்டி பற்றி கேள்வி பட்டு எட்டி-யை பார்க்க விரும்பியதாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றனர். ஆனால் அந்த ஊர் மக்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது .

இமயமலைக்கு பயணம் சென்று திருப்பிய இங்கிலாந்து நாட்டின் ஆய்ய்வலர்கள் கூற்றுபடி பல்வேறு வழித்தடங்களில் மிகப்பெரிய காலடிகளை கண்டதாக பதிவிற்றிருக்கிறார்கள்.

"Still Living? Yeti, Sasquatch, and the Neanderthal Enigma"  என்ற புத்தகத்தில் Myra Shackley எட்டி -யை பற்றி சில விசித்திரமான தகவல்களை பதிவிற்றுருக்கிறார் . அதில் எட்டி-யை பார்த்த சில மலை வாழ் மக்களின் கூற்றுப்படி எட்டி சுமார் 8 அடி உயரமும் சுமார் 200 கிலோ விற்கு குறைவில்லாத எடையும் கரிய நிறமும் மேலும் வேட்டையாடி உணவை உண்ணும் பழக்கமும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் மிகுந்த சத்தத்துடன் அது உறுமும் சத்தமும் கேட்டதாக கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்கள் உண்மையா என்பது தெரியவில்லை என்றும் தவறாக அடையாளம் காணப்படவையைக்கூட இருக்கலாம் இன்றும் குறிப்பிட்டுள்ளார்.

எட்டி-யின் புகைப்படமும் சர்ச்சைகளும் 

1986 ஆம் ஆண்டு Anthony Wooldridge என்பவர் இமாலய மலையில் நடை பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு விசித்திரமான காலடியை பார்த்து அதை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார் , அது ஒரு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றிருக்கிறது , சற்றும் எதிர்பாரத விதமாக தூரத்தில் நிறுத்த ஒரு மிக பெரிய கரியஉருவத்தை பார்த்திருக்கிறார், உடனே தான் கைவசம் வைத்திருந்த காமெராவின் 2 புகைப்படங்களை பதிவிட்டு அங்கிருந்து தப்பி வந்துள்ளார். அந்த புகைப்படமே எட்டி-யை பற்றிய நம்பிக்கையை அனைவர்க்கும் கொடுத்துள்ளது . 


மேலும் பல சர்ச்சைகளுக்கு பின்னர் அது ஆராய்ச்சியார்களால் ஆராயப்பட்டு உண்மையான புகைப்படம் தான் என்று வெளியிட்டுள்ளனர்.. இன்றளவும் எட்டி இருப்பததற்கு சாட்சியாக உள்ளது ஆதாரங்களுள் இந்த புகைப்படம் தாஒன்று .

ரஷ்யாவின் தேடல் 

2011 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஆராச்சியாளர்கள் குழுவை எட்டி ஆராய்ச்சிக்கு ஹிமாலயம் செல்ல ஆணையிட்டடது . தனது ஆராய்ச்சி முடிவையும் பல திடுக்கிடும் தகவல்களையும் பயணத்தின் முடிவில் வெளியிட்டது அந்த ஆராய்ச்சி குழு. அந்த குழுவுடன் பயணம் செய்த உயிரியல் ஆராய்ச்சியாளரான Bindernagel தனது பதிவில் எட்டி இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் அதன் உறைவிடம் அமைத்தல், வேட்டையாடும் விதம், அதன் உயரம், எடை பற்றி நாம் அறிந்தவை அனைத்தும் உண்மையே என்றும் மேலும் அதில் 2 வகை பிரிவுகள் உள்ளதாகவும் கூறுகிறார். மாமிசம் உண்ணும் வெண்மை நிற பனிமனித இனமும் BIG FOOT என்ற இனமும் வேறுவேறு என்று கூறுகிறார் .

மற்றுமொரு ஆராய்ச்சியாளரான Jeff Meldrum அதே குழுவில் பயணம் சென்றவர் இது அனைத்தும் கட்டுக்கதையே என்றும் மேலும் ரஷ்யா அரசு பல உண்மைகளை பொய்யாக தொடுத்துள்ளது என்றும் கூறுகிறார். 

பல நூற்ற்றாண்டு காலமாக இருந்துவரும் இந்த மர்மம் இன்றும் சர்ச்சையாகவே உள்ளது . இனிவரும் காலங்களிலாவது இதற்க்கான விடையை கிடைக்கப்பெற செய்ய ஆராய்ச்சிகள் உதவ வேண்டும் .

No comments:

Post a Comment

Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...