Monday 30 April 2018

IPL 2018 - CSK vs DD | தோனி அதிரடி : சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!!!!

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது. புனேவில் நடக்கும் 30வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது. சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், ‘டாஸ்’ வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். 


சென்னை அணியில் 4 மாற்றங்கள் செய்து காலம் இறங்க முடிவுசெய்தது . சிறந்த தொடக்கம் :
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வாட்சன் & டூப்லெஸிஸ் ஜோடி முதல் விக்கெட்க்கு 00 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் டுப்லெஸிஸ் கேட்ச் என்ற முறையில் ஆட்டமிழந்தார் . பின்னர் இறங்கிய ரெய்னா சொற்ப ரனில் ஆட்டமிழக்க சென்னை அணி சிறு தடுமாற்றம் கண்டது. ஆனாலும் வாட்சன் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் . அவர் 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் இருந்தது .

டோனி அசத்தல் ஆட்டம் 

பின்னர் களம் இறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றா ர். தோனி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சிக்ஸர்களை விளாசினார். ராயுடு வுடன் ஜோடி சேர்த்து அணியின் ஸ்கோரை 211 ஆக உயர்த்தினார். இறுதியில் 212 எதுதான் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது சென்னை அணி .

டெல்லி அணி திணறல் :

டெல்லி அணி பேட்டிங் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டியது ஆனால் பவர் பழைய ஓவர்களில் 56 ரன்கள் குவித்திருந்தநிலையில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது . ஏழாவது ஓவரின்  முடிவில் டெல்லி அணியின் ஷ்ரேயஸ் ஐயர் ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார் . ஜடேஜா வீசிய ஒன்பதாவது ஓவரில் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன மாக்ஸ்வேள் போல்ட் என்ற முறையில் ஆட்டமிழக்க டெல்லி அணி மிக பெரிய சரிவை சந்தித்தது . ரிஷஅப்  பந்த் நேர்த்தியான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார், அவர் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவிடம் கேட்ச் குடுத்து அவுட் ஆனார். பிராவோ வீசிய 19 வது ஓவரில் 3 சிக்ஸர் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார் விஜய் ஷங்கர் . இருபது  ஓவர்கள் முடிவடைந்த நிலையின் டெல்லி அணி 13 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்றது . விஜய் ஷங்கர் ஆட்டம் இழக்காமல் இறுதி வரை போராடினார். அவர் 31 பந்துகளில் 54* ரன்கள் எடுத்திருந்தார்.
 ஆட்டநாயகன் விருது 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த ஷேன் வாட்சன் க்கு கொடுக்கப்பட்டது .



No comments:

Post a Comment

Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...