Sunday 27 May 2018

மீண்டும் மகுடம் சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி -VIVO IPL 2018

மீண்டும் மகுடம் சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி -VIVO IPL 2018

ஐபில் 2018 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சென்னை - ஐதராபாத் அணிகளுக்கிடையே மே 27 அன்று  நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக சென்னை அணி 19 முறை பிளே ஆஃப் சுற்றில் விளையாடியுள்ளது. அதில் 7தோல்விகளும், 11 முறை வெற்றியையும் ருசித்துள்ளது.  இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சென்னை அணி 7 முறையும், ஐதராபாத் அணி 2 முறை வென்றுள்ளது .


டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி . முதலில் களம்  இறங்கிய கோஸ்வாமி , தவான் ஜோடி ஆரம்பம் முதலே கொஞ்சம் திணறியது. பின்னர் கோஸ்வாமி ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.

பின்னர் களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் சிறப்பாக விளையாடி 47 ரன்கள் எடுத்திருந்த நிலையின் கரன் சர்மா பந்துவீச்சில் டோனியின் அருமையான கீப்பிங் திறனால் stumping என்ற முறையில் அவுட் ஆகி திரும்பினார் .

பின்னர் களம் இறங்கிய யூசுப் பதான் சாஹிப் உல் ஹசன் ஜோடி அதிரடி காட்டியது . யூசுப் பதான் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். பதினைந்து ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோர் 126 ஆக இருந்தது இது அந்த அணிக்கு நல்ல அஸ்திவாரமாக அமைந்தது. பிராவோ வீசிய 16 வது ஓவரில் கேட்ச் என்ற முறையில் சாஹிப் உல் ஹசன் வெளியேறினார் . இவரை தொடர்ந்து ஹூடா களம்  இறங்கினார் .அவர் சொற்ப ரன்னிலேயே கேட்ச் ஆகி வெளியேறினார்.

இறுதியில் நிகிடி மற்றும் தாகூர் சிறப்பான பந்துவீச்சு காரணமாக சன் ரைஸ்ர் அணி 178 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது .

சன்ரைசர்ஸ் தனது பந்துவீச்சை தொடங்கிய முதல் ஓவர் ரன் ஏதும் கொடுக்காமல் புவனேஷ்குமார் சிறப்பாக வீசினார். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர்கள் வாட்ஸனும் டுப்லெஸிஸ்.

அடுத்து காலம் இறங்கிய ரெய்னா வாட்சன் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை நன்றா உயர்த்தினார். ரெய்னா 12 ஒவேரிலே கேட்ச் என்ற முறையில் அவுட் ஆகி வெளியேறினார் . ஆனாலும் வாட்சன் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார். அம்பட்டி ராயுடு வெற்றி இலைகை அடைந்த போது வாட்சன் நூற்றுப்பதினெழு ரன்னுடன் ஆட்டமிளாகாமல் இருந்தார். வாட்சன் 57 பந்துகளில் இந்த ஸ்கோரை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது .

இறுதியில் சென்னை அணி கோப்பையை மூன்றவது முறையாக கைப்பற்றியது .  சிறந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் சிறந்த வீரரராக தேர்ந்தெடுக்கபட்டர்.



No comments:

Post a Comment

Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...