Thursday 12 July 2018

இராணுவத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் சேர்ப்பு - அரசு புதிய அறிவிப்பு

இராணுவத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் சேர்ப்பு - அரசு புதிய அறிவிப்பு !!!

இந்திய இராணுவத்தில் பட்டதாரி இன்ஜினீயர்களை சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது .

இந்திய இராணுவத்தில் பல்வேறு சேர்க்கையின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது 128-வது டெக்னீகள் கிராஜுவேட் கோர்ஸ் என்ற பயிற்சித் திட்டத்தில் , பட்டதாரி என்ஜினீயர்கள் , இந்திய இராணுவ அகாடெமியில் சேர்க்கப்படுகிறார்கள். 

மொத்தம் 40 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள் . இதில் சேர விரும்புவோர் இந்திய குடியுரிமை பெட்ரா ஆண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும் . அவர்கள் 1-1-2019 தேதியில் 20 முதல் 27 வயதுக்குள் உட்பட்டவராக இருக்க வேண்டும். சிவில், ஆர்கிடெக்சர் , மெக்கானிக்கல் , எலக்ட்ரிகல் , கம்ப்யூட்டர் சயின்ஸ் , டெலிகம்யூனிகேஷன் , மெடலுர்ஜிக்கல் , ஐ .டி , எலக்ட்ரானிக்ஸ் , மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் இன்ஜினியரிங் மற்றும் அது தொடர்புடைய பட்டப் படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கு தேர்வு செய்ய படுபவர்கள் டேராடூனில் உள்ள இராணுவ அகாடமியில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற்றபின் பணி நியமனம் பெறலாம். லெப்டினன்ட் அதிகாரி முதல் பிரிகேடியர் , மேஜர் ஜெனரல்  
வரை பல்வேறு பதவி உயர்வுகளை பெரும் வாய்ப்பு மிக்க பணியாகும் .

உடல்திறன் தேர்வு,  நுண்ணறிவு திறன் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு 
செய்யப்படுவார்கள் .

விருப்பமும், தகுதியும்   உள்ளவர்கள் இணையதளம் இணையதளம் வழியாக 
விண்ணப்பம்   சமர்ப்பிக்கலாம் . விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும் விரிவான  விவரங்களை கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணைய பக்கத்தை பார்க்கவும்.






No comments:

Post a Comment

Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...